ரொம்ப காலமாக செய்ய நினைத்து தள்ளி போட்டு கொண்டிருந்த விஷயம் இது, தள்ளி போடலின் முக்கிய காரணம் மிக சரியான அணுகுமுறை இதுவோ, இல்லை அதுவோ எங்கின்ற குழப்பம். So, கடைசியாக சரி முதலில் செய்வோம், பின்பு ஆராய்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இறங்கி விட்டேன். இது ரத்தப் புற்று நோய் பற்றி நான் உருவாக்கும் ஒரு கையேடு. இந்த முயற்ச்சியின் intended objective என்று சொல்ல வேண்டுமானால் ஒருவருக்கோ இல்லை ஒருவரின் சுற்றத்தாருக்கோ ரத்த புற்று நோய் உள்ளது என்று அறியபட்டால் அதன் தொடர்ச்சியாய் வரும் நிகழ்வுகளை எதிர் கொள்வதற்கும், உடனடியாக எடுக்க வேண்டிய தீர்மானங்களை எடுப்பதற்க்கும் உதவும் ஒரு சிறு கருவியாக தான் நான் இந்த கையேட்டின் பயனை பார்கிறேன். முதல் முயற்சியாய் நான் American Cancer society உருவாக்கியுள்ள Handbook on Acute Myeloid Leukemia என்ற புத்தகத்தை தமிழாக்கம்(இதை தமிழாக்கம் என்று சொல்வது நியாயமான வார்த்தை அல்ல, for want of a better word, am using this என்று கொள்ளலாம்.) செய்ய முயல்கிறேன். இந்த முயற்சியில் நான் மருத்துவ சொற்களுக்கு உரிய தமிழ் வார்தைகளையெல்லாம் பயன் படுத்தவில்லை, பயன் படுத்த முயற்சி செய்யவும் இல்லை. இது ஒரு authentic medical materialம் இல்லை. முன் சொன்னதை போல வாழ்கையில் diagnosis of cancer for oneself or for a loved one, எங்கின்ற ஒரு தருணத்தை சந்திப்பவர்களுக்கு, அதை ஒரளவுக்கு சரியாக அணுக பயன் அளிக்கும் என்று நான் உணர்ந்த விஷயங்களின் தொகுப்பு தான் இந்த கையேடு.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், நான் என் வாழ்கையில் அத்தகைய ஒரு தருணத்தை சந்தித்த பொழுது, இந்த ஒரு information or a perspective, if it is available would be very nice என்று feel பண்ணி, that it was missing என்று உணர்ந்த சில விஷயங்களை, gapsஐ fill பண்ணும் ஒரு முயற்சி இது. அத்தகைய ஒரு முயற்சிக்கு இந்த ACS material ஒரு நல்ல frameworkஐ அளிக்கிறது என்பதால் அதை ஒரு அஸ்திவாரமாக வைத்து கொண்டு இதை ஆரம்பிக்கிறேன்.
முதலில் Cancer என்றால் என்ன என்று பார்போம். நம் உடலில் உள்ள ஏதாவது ஒரு பாகத்தில் உயிரணுக்கள் கட்டுக்கடங்காமல் வளர ஆரம்பித்தால் அதுவே புற்று நோய் வளர்ச்சியின் அறிகுறியாகிறது. புற்று நோயென்பது பல வகைகளாக இருக்கும் பொழுதிலும் இந்த உயிரணுக்களின் கட்டுக்கடங்காத வளர்ச்சியே புற்று நோயின் மூலமாக அமைகிறது.
உடலில் உள்ள சாதாரண உயிர் அணுக்கள் வளர்ந்து, பிரிந்து(process of Cell Division) ஒரு ஒழுங்கான முறையில் மறைந்து விடும். மனிதர்களின் குழந்தை பிராயத்தில் சாதாரண உயிர் அணுக்கள் மிக தீவிரமாக பிரிந்து நாம் இளம்பிறாயத்தை அடையும் வரை நம் உடலின் துரித வளர்சிக்கு வழி வகுக்கிறது. அதன் பிறகு ஒரு ஸ்திர நிலையை அடைந்து ஏதோ ஒரு தேவையின் பொருட்டு மட்டுமே பிரிகிறது. அந்த தேவை வேறொரு உயிரணுவின் மறைவை சரிப்படுத்துவதற்கோ, அதன் சிதைவை சரிப்படுத்துவதற்கோ ஏற்படுவதாக இருக்கும். ஆனால் இந்த புற்று நோயணுக்கள், அப்படி அல்லாமல் கட்டுக்கடங்காமல் பிரிந்தும், சாதாரண உயிரணுக்களை ஆயுட்காலத்தை தாண்டி வாழ்ந்தும் சாதாரண உயிரணுக்களில்ருந்து மாறுபடுகிறது.
எல்லா உயிரணுக்களிலும் DNA என்ற ஒரு சமாச்சாரம், அந்த உயிரணுவின் செயல்பாட்டை நிர்ணயிக்கின்றது. இந்த DNAவுக்கு சிதைவு ஏற்படும் தருணங்களில் இந்த Cancer cells உயிர்பிக்கிறது. பல நேரங்களில் இந்த சிதைவை அணுக்கள் தானே சரி செய்து கொண்டு விடுகின்றது, அப்படி இயலாத தருணங்களில் அவை Cancer cellஆக மாறுகின்றன. இந்த சிதைந்த DNAக்களை நம் வம்சாவளியாகவோ, நம் சுற்றுபுறத்தில் ஏற்படும் ஏதோ ஒன்றோ உண்டாக்குகிறது. புகை பிடித்தல், மற்றும் தொழிற்சாலைகள் உமிழும் சில விஷபுகைகளை சுவாசிப்பதும் சில உதாரண காரணங்கள்.
பெரும்பாலும் கேன்சர் ஒரு கட்டி வடிவத்தில் தான் உருவாகிறது. ரத்த புற்று நோய் போன்ற சில கேன்சர்கள் இதற்கு விலக்கு. அதே போல உருவாகும் எல்லா கட்டிகளும் கேன்சர் அல்ல. அத்தகைய கட்டிகளை beningn tumor என்றும் கேன்சர் கட்டிகளை malignant tumor என்றும் சொல்வர்.
இந்த கேன்சரின் இன்னொரு முக்கிய பிரச்ச்னை அவை தான் தோன்றிய இடத்திலிருந்து கிளம்பி உடலின் பல பாகங்களுக்கும் பரவ ஆரம்பிக்கும். மேல் சொன்ன சில சிறு குறிப்புகள் மட்டுமே Cancer பற்றி பொத்தாம் பொதுவாக சொல்ல கூடிய கருத்துக்கள். மற்றபடி Cancer குறித்து எழும் பல கேள்விகள், அதை குணப்படுத்த முடியுமா, அது உயிர் கொல்லியா, அதனால் நோயாளியின் வாழ்க்கை எப்படி எல்லாம் பாதிக்கப்படும் போன்ற பல கேள்விகளுக்கு அவை எந்த வகை கேன்சர், அந்த கேன்சரின் நிலை என்ன போன்ற பல factorsஐ ஒத்தே பதில் அமையும். அத்தகைய இந்த பல வகை கேன்சர்களில் ஒன்று தான் இந்த Leukemia எங்கின்ற ரத்த புற்று நோய்.
இந்த கையேட்டில் நாம் Acute Myeloid Leukemia(more specifically Adult Acute Myeloid Leukemia, AML) என்ற கேன்சர் பற்றிய சில விஷயங்களை முதலில் அறிந்து கொள்வோம
Sunday, August 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment