Acute Myeloid Leukemia என்பதை குறுக்கி குறியிடும் சொல்லே AML. இதில் Acute என்பது கவனிக்க பட வேண்டிய வார்த்தை. நோய்களை அதன் தீவிரமடையும் தன்மையும் அதற்காகும் கால அவகாசத்தையும் ஒட்டி Acute or Chronic illness என்று இரு வகைப் படுத்தப்படுகிறது.
Diabetes, Hyper Tension மற்றும் சில வகை புற்று நோய்கள் கூட chronic illness வகையை சார்ந்தவை என்று கூறுகின்றனர். இதன் அர்த்தம் இந்த வகை நோய்கள் உடலிலேயே சில பல வருடங்கள் தங்கி அதனால் ஏற்படுத்தக்கூடிய உடல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தவல்லது. ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதன் விளைவாக இருதயம் மற்றும் சிறுநீரகம் பாதிப்புக்கு உள்ளாகும் என்பது ரத்த அழுத்த நோய் தோன்றி சில/பல வருடங்களுக்கு பிறகு அவை கட்டுப்படுத்தபடாமல், கவனிக்கபடாமல் இருந்ததால் அவை உடலிலியே உறைந்து இந்த விளைவுகளை ஏற்படுத்த வல்லது.
இதற்கு மாறாக Acute வகை சார்ந்த பிரச்சனைகள் சில நாட்கள் மாதங்களிலேயே அதன் தீவிரம் அதிகரித்து உருபிகளின் செயளிழப்போ, உயிருக்கே கூட ஆபத்தோ கூடியவை. இந்த மேல் சொன்ன விளக்கங்களுக்கு இந்த ரத்த புற்று நோய் விஷயத்திலும் Acute Myeloid Leukemia and Chronic Myeloid Leukemia என்று இரு வகை உள்ளன.
இதில் Acute வகை தோன்றிய சில மாதங்கிளிலேயே கவனிக்க படா விட்டால் உயிரையே மாய்க்க வல்லது. ஆனால் சில நேரங்களில் chronic வகையோ சில நேரங்களில் நோய் தீவிரம் அடைய ஏழு எட்டு வருடங்கள் குட`ஆகலாம் என்பதால் அதை உடனே சிகிச்சை செய்து தொந்த்தரவு செய்ய வேண்டாம் என்று கூட முடிவெடுப்பது உண்டு.
Tuesday, September 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment