Sunday, March 23, 2008

Raguvaran

ரகுவரன்

இனி தமிழ் சினிமாவின் பல கதாசிரியர்கள் தங்கள் கதைக்கான பாத்திரங்களை வடிவமைக்கும் பொழுது "ச்சே இந்த role செய்வதற்கு ரகுவரன் இல்லாமல் போய் விட்டாரே " என்றும் சினிமா பார்க்கும் ரசிகர்கள் "இந்த role ரகுவரன் செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும்" என்றும் பல முறை அங்கலாய்பார்கள். ரகுவரனின் மரணம் தமிழ் சினிமாவுக்கு ஒரு பேரிழப்பு.

ரகுவரனின் முதல் படத்தை இயக்கிய ஹரிஹரன் அவர்களுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு(என் அண்ணனுக்கு அவர் ஒரு வகையில் குரு மாதிரி). அவர் ரகுவரன் அறிமுகமான காலத்தில் இந்திய அளவில் Amitabh Bachanன் Angry Young Man idea ஆக்ரமித்திருந்த காலம், அதை தமிழகத்திலும் பிரதிபலிக்க கூடிய ஒரு முகமும் திறமையும் ரகுவரனிடம் பார்த்தேன் என்று குறிப்பிட்டார்.

வில்லத்தனம் என்றால் கொடூரமான முக அசைவுகள் மற்றும் செய்கைகள் என்ற நிலையை மாற்றி Sathyaraj create செய்த ஒரு acting style வழியில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ரகுவரன். வில்லனாகவும் மட்டும் இன்றி பல குணச்சித்திர பாத்திரங்களிளும் தன் performance மூலம் தன் தனித்துவத்தை நிலை நாட்டினார்.

நான் மிகவும் ரசித்த அவரின் சில கதாபாத்திரங்கள்

- சம்சாரம் அது மின்சாரம், நடுத்தர குடும்பதில் மூத்த மகனாக அவரின் performance and characterisation is quite memorable

- ரன், மாதவனின் மைத்துனனாக படத்தின் ஒரு pivotal character

- யாரால் மறக்க முடியும் முதல்வன் interview காட்சியை

- பாட்ஷா, பாட்ஷா... மாணிக் பாட்ஷா... வுக்கு நிகராக பிரபலம் Antony...Mark Antony.. dialogue..ரஜினி படத்தில் கைத்தட்டல் வாங்கிய ஒரு வில்லன்..ரஜினி ரசிகர்கள் ரஜினிக்கு வில்லனாக பார்க்க ஆசைப்படும் ஒரு நடிகர்..

- மிகவும் அதிகம் பேசப்படாத, அனால் அபாரமான அவரது performance in a television serial தரையில் இறங்கும் விமானங்கள்.. மற்றும் R.C.சக்தியின் கூட்டு புழுக்கள்.

கமல் படத்தில் அவர் நடித்த படம் எனக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை..ஒரு வேலை நடித்ததே இல்லையோ..

போதை பழக்கத்துக்கு அடிமையானதும் அதன் விளைவால் ஏற்பட்ட உடல் நலிவுமே அவரின் அகால மரணித்திற்க்கு காரணமாக சொல்ல படுகிறது. அகால மரணம் என்பது மிக கொடுமையான ஒரு நிகழ்வு. அந்த கொடும் நிகழ்வுக்கு இத்தகைய பழக்க விளைவுகள் ஒரு வகையில் காரணம் என்னும் பொழுது இந்த கொடுமைக்கு அவரையே கூட ஒரு கர்த்தாவாக எண்ணத் தோன்றுகிறது. அவரின் 10 வயது மகன் கதறி அழும் காட்சியை பார்க்கும் பொழுது "No pleasure in life is worth, if you think it would even remotely be a cause for such a pain" என்று தான் எண்ணத் தோன்றியது.

No comments: