Showing posts with label Cinema. Show all posts
Showing posts with label Cinema. Show all posts

Thursday, August 13, 2009

திரும்பி பார்க்கிறேன்: இந்த வாரம் சித்ராலயா கோபு

Thirumbi Paarkiraen
(Jaya TV, Monday-Friday, 10 p.m.)
The channel’s much watched show will feature writer-director Chitralaya Gopu, from August 17-21. Beginning as an assistant dialogue writer to veteran director Sridhar, Gopu, whose comedies are ever popular, went on to direct more than 20 films. Catch him recount his experiences in cinema!

Tuesday, May 5, 2009

கருணாநிதிக்கு கமல் tuition எடுக்கலாம்: ரீமேக் கம்பன் கொடுத்த ஐடியா

"தலைவன் இருக்கின்றான்' என்ற தலைப்பை மாற்றியதற்கு காரணம்?
அதை விட "உன்னைப்போல் ஒருவன்' என்ற தலைப்பு பொருத்தமாக இருந்ததால். தவிர, இது எழுத்தாளர் ஜெயகாந்தனின் தலைப்பு. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறேன்.[ ஒரு புதன்கிழமை என்று வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் ]

சிறந்த கதாசிரியரான நீங்கள் ஒரு ஹிந்திப் படத்தை "ரீமேக்' செய்ய வேண்டிய காரணம்?

இது கம்பனிடமிருந்து வந்த "ஐடியா'; வால்மீகி எழுதிய ராமாயணத்தைத் தமிழில் கம்பன் எழுதியதுதான் காரணம். நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் அதைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த "ரீமேக்'. ஹிந்தியில் இந்தக் கதையைச் சிறப்பாகச் செய்திருந்தார்கள். அந்த நல்ல விஷயத்தைத் தமிழகத்துக்கும் தர வேண்டும் என்ற ஆசைதான்.ஹிந்தியில் ஒரு பிரச்னையை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார்கள். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு பிரச்னை பெரிய விஷயமாக இருக்கும். ஜார்க்கண்டில் இனப் பிரச்னை என்றால் தமிழகத்தில் தற்போது ஈழப் பிரச்னை இருக்கிறது. தமிழுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்து படத்தை உருவாக்கி வருகிறோம்.[ புதன்கிழமை தேசிய பிரச்சனையை வைத்து எடுக்கப்பட்ட படம். தேசிய பிரச்சனை தமிழ் நாட்டு பிரச்சனை இல்லை என்று சொல்ல வருகிறாரா கமல் ? தற்போது தமிழ்நாட்டு பிரச்சனை என்ன ? ]

அப்படியானால் இந்தப் படத்தில் ஈழப் பிரச்னை இடம்பெறுகிறதா?
இல்லை. ஈழப் பிரச்னை பற்றி ஒரு படம் எடுக்கும் எண்ணம் இருக்கிறது. இப்போது அதற்கான தைரியம் இல்லை.

தமிழ் நடிகர்கள் பலர் இருக்க, மலையாள நடிகர் மோகன்லாலை இந்தப் படத்தில் நடிக்க வைப்பதற்கான காரணம்?
மொழிக்கு அப்பாற்பட்டது கலை. மோகன்லாலை அவர் இன்னார் இன்னார் என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. அவர் மிகச் சிறந்த நடிகர். அவருடைய திறமைக்காகத்தான் இந்த வேடம். கடந்த சில ஆண்டுகளாகவே இணைந்து நடிக்க வேண்டும் என அடிக்கடி பேசிக் கொள்வோம். இப்போதுதான் சரியான களம் அமைந்திருக்கிறது.
படத்தின் சிறப்பம்சம்?
நல்ல கதை. மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுவது பலம். படத்தில் "ரெட்' கேமராவை முதல்முறையாகப் பயன்படுத்துகிறோம். காலை படமாக்கும் காட்சிகளை இரவில் "எடிட்' செய்துவிடலாம்.

"அன்பே சிவம்' உள்ளிட்ட உங்களுடைய சில தரமான படங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடையாததற்கு காரணம்?

சில சமயங்கள் அவ்வாறு நடப்பதுண்டு. யாரையும் குற்றம் சொல்லமுடியாது. எம்.ஜி.ஆரை விட அடித்தட்டு மக்களைச் சென்றடைந்த ஒருவர் இருக்க முடியாது. அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரின் "பாசம்' என்ற நல்ல படம் 10 நாள்களைத் தாண்டி ஓடவில்லை.இதுபோன்ற விஷயங்களில் தோல்விகள் ஏற்பட்டாலும் மனம் தளராமல் தொடர்ந்து நல்ல முயற்சிகளில் ஈடுபடுவேன். எல்லாத் தலைவர்களுமா தேர்தலில் வென்று விடுகிறார்கள்? தோற்றாலும் தொடர்ந்து அரசியலில் இருப்பதில்லையா? அதுபோலத்தான்.நிகழ்ச்சியில் ஸ்ருதி ஹாசன், எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரன், இரா.முருகன், யு டி.வி. மோஷன் பிக்சர்ஸ் ராம் மிர்சந்தானி, பட இயக்குநர் சக்ரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

திரையுலகில் 50-ம் ஆண்டில் கமல்!தமிழ்த் திரையுலகம் தோன்றி 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் சூழலில் நடிகர் கமல்ஹாசன் "உன்னைப்போல் ஒருவன்' படத்தின் மூலம் திரையுலகில் தனது 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.ஏ.வி.எம். நிறுவனம் தயாரிப்பில் கமல், குழந்தை நட்சத்திரமாக நடித்த "களத்தூர் கண்ணம்மா' 1959 ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியானது."உன்னைப்போல் ஒருவன்' படத்தின் அனைத்துப் பணிகளும் மே மாதம் நிறைவடைந்து, ஜூன் இறுதியில் வெளியாகத் தயாராகிவிடும். இருப்பினும் ரசிகர்கள், திரையுலக நண்பர்கள் அனைவரின் விருப்பப்படியும் பொன்விழாவை முன்னிட்டும் "களத்தூர் கண்ணம்மா' வெளியான ஆகஸ்ட் 12-ம் தேதி "உன்னைப்போல் ஒருவன்' படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

Saturday, July 19, 2008

Suhasini-- Haasini Pesum Padam



சுஹாசினி-- ஹாசினி பேசும் படம்.

எனக்கு தெரிந்து திரை விமர்சனங்களுக்கு தமிழகத்தில் பல காலங்களாகவே ஒரு முக்கியத்துவம் இருந்தது உண்டு. "விகடன்ல நல்ல மார்க்கு குடுத்திருகான்பா படம் நல்லா இருக்கும் போல இருக்கு" என் கின்ற வகையில் ஒரு திரைபடத்தை பார்க்க தீர்மானிப்பதற்கும் அந்த படத்தை பற்றிய கருத்து ஏற்படுத்தி கொள்வதற்கும் அதற்கு ஒரு முக்கிய பங்கு இருந்துள்ளது. தமிழில் almost எல்லா பத்திரிக்கைகளிலும் திரை விமர்சனங்கள் பகுதி இருக்கும் என்ற போதிலும் விகடன் மற்றும் குமுதம் இரண்டுக்கும் ஒரு தனி முக்கியதுவம் உண்டு. 80களில் பாக்கியராஜின் சின்ன வீடு படத்திற்கு விகடன் விமர்சனம் சாதகமாக இல்லை என்றவுடன் அடுத்த வாரம் படத்துக்கான விளம்பரம் " கட்டெறும்பு ஊரி கல்லு தேஞ்சிடாது விகடன் விமர்சனம் படத்தை பாதிக்காது" . இன்றைய காலத்தில் பத்திரிக்கை விமர்சனங்கள் மக்களை சென்றடைவதற்க்கு முன்பே internet blogs, online movie portals இவை எல்லாவற்றிலும் அக்கு வேறு ஆணி வேறாக பேத்து எடுத்து விடுகிறார்கள் ஒரு படத்தை.

90களில் மற்றும் early 2000ல் சன் டீவியில் ஒருவர் கால் மேல் கால் போட்டு கொண்டு எந்த அளவுக்கு ஒரு படத்தை எள்ளி நகையாடுகிறோமோ அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சியின் பெருமை உயரும் என்ற குறிக்கோளில் ஒரு திரை விமர்சனம் நிகழ்ச்சி வருவது உண்டு. புது படங்களின் clipping பார்கலாம் என்பதாலோ இல்லை மக்க்ளும் அவர் எள்ளி நகையாடுவதை ரசிப்பதாலோ இந்த நிகழ்ச்சியும் popular.

இந்த contextல் பார்க்கும் பொழுது சுஹாசினியின்-- ஹாசினி பேசும் படம் நிகழ்ச்சி really comes as a breath of fresh air. சினிமாவை வெறும் ஒரு போகப் பொருளாக அணுகாமல் அது ஒரு கலை வடிவம் அதை விமர்சனம் செய்வதற்கு முதலில் அதை appreciate பண்ண தெரியணும் அந்த appreciationகு ஒரு பயிற்சி தேவை என் கின்ற அணுகுமுறையில் படங்களை அணுகும் ஒரு நிகழ்ச்சி. பொதுவாக கொடுத்த காசுக்கு சிரிச்சோமா, ஏதோ மசால் வடை போல சாப்பிட்டோம் பிடிச்சுதா பிடிக்கலையா எங்கின்ற அளவிலேயே இருக்கிறது சினிமா குறித்த அணுகுமுறை . இது எனக்கு ஒரு விதத்தில் ஆச்சிரியதையும் வருத்தத்தையும் தருவதற்கு காரணம் சினிமா அளவுக்கு மக்களை engage பண்ற இன்னொரு விஷயமான cricketகு அந்த அளவுக்கு ஒரு ரசிக்கற ஒரு உணர்வு இருக்கிறது. Ofcourse, it is a irrelevant comparison, but still i hope some people can relate to my ஏக்கம் and understand what i mean here.

She basically starts the program by presenting a short overview of the genre in which the movie belongs to. Then she refers 1-2 main films in this genre and says the good and bad things of those. This puts the film and how one should evaluate the film by giving us a context. She typically takes up 1 or 2 films for review in one episode. She follows up a simple intro to the film with a interview of the people involved in the film. She tries to get their perspective on some of the pivotals items of the film. Infact, she also goes further and tries to talk a bit about background of the director and how the trajectory of the directors life has impacted the film and such things. என்னை பொருத்த வரை இது ஒரு ரொம்ப ஆக்கபூர்வமான நிகழ்ச்சி. She also tries to give a lot of importance and visibility to small and medium buget films and their creators.

குறைகள் அப்படினு சொல்லனும்னா நிரைய்யா she repeats herself in the show. It is so blatant, almost பாதி programme சொன்னதையே திருப்பி சொல்லிண்டிருகற உணர்வு ஏற்படறது. And Suhasini often tells the answer to her questions to the interview and puts it like..this is my question and this is your answer right kinda conversation. She is not a good interviewer. Probably she can watch her cousin Anu Haasan program to better herself on that front.

Another thing is her costumes for the show. Ofcourse this is a very personal thing. எனக்கு பிடிச்ச Suhasini அப்படின்னா ஒரு conventional Saree, or a Churidhar, where the care for her dressing does not appear very transparent. For people who had their growing years in 90's major impact of Suhasini was like Sindhu Bhairavi(I identify that character a lot with Raji of இரும்புக் குதிரைகள்..) and thats the Suhasini one wants to see.

Sunday, March 23, 2008

Raguvaran

ரகுவரன்

இனி தமிழ் சினிமாவின் பல கதாசிரியர்கள் தங்கள் கதைக்கான பாத்திரங்களை வடிவமைக்கும் பொழுது "ச்சே இந்த role செய்வதற்கு ரகுவரன் இல்லாமல் போய் விட்டாரே " என்றும் சினிமா பார்க்கும் ரசிகர்கள் "இந்த role ரகுவரன் செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும்" என்றும் பல முறை அங்கலாய்பார்கள். ரகுவரனின் மரணம் தமிழ் சினிமாவுக்கு ஒரு பேரிழப்பு.

ரகுவரனின் முதல் படத்தை இயக்கிய ஹரிஹரன் அவர்களுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு(என் அண்ணனுக்கு அவர் ஒரு வகையில் குரு மாதிரி). அவர் ரகுவரன் அறிமுகமான காலத்தில் இந்திய அளவில் Amitabh Bachanன் Angry Young Man idea ஆக்ரமித்திருந்த காலம், அதை தமிழகத்திலும் பிரதிபலிக்க கூடிய ஒரு முகமும் திறமையும் ரகுவரனிடம் பார்த்தேன் என்று குறிப்பிட்டார்.

வில்லத்தனம் என்றால் கொடூரமான முக அசைவுகள் மற்றும் செய்கைகள் என்ற நிலையை மாற்றி Sathyaraj create செய்த ஒரு acting style வழியில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ரகுவரன். வில்லனாகவும் மட்டும் இன்றி பல குணச்சித்திர பாத்திரங்களிளும் தன் performance மூலம் தன் தனித்துவத்தை நிலை நாட்டினார்.

நான் மிகவும் ரசித்த அவரின் சில கதாபாத்திரங்கள்

- சம்சாரம் அது மின்சாரம், நடுத்தர குடும்பதில் மூத்த மகனாக அவரின் performance and characterisation is quite memorable

- ரன், மாதவனின் மைத்துனனாக படத்தின் ஒரு pivotal character

- யாரால் மறக்க முடியும் முதல்வன் interview காட்சியை

- பாட்ஷா, பாட்ஷா... மாணிக் பாட்ஷா... வுக்கு நிகராக பிரபலம் Antony...Mark Antony.. dialogue..ரஜினி படத்தில் கைத்தட்டல் வாங்கிய ஒரு வில்லன்..ரஜினி ரசிகர்கள் ரஜினிக்கு வில்லனாக பார்க்க ஆசைப்படும் ஒரு நடிகர்..

- மிகவும் அதிகம் பேசப்படாத, அனால் அபாரமான அவரது performance in a television serial தரையில் இறங்கும் விமானங்கள்.. மற்றும் R.C.சக்தியின் கூட்டு புழுக்கள்.

கமல் படத்தில் அவர் நடித்த படம் எனக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை..ஒரு வேலை நடித்ததே இல்லையோ..

போதை பழக்கத்துக்கு அடிமையானதும் அதன் விளைவால் ஏற்பட்ட உடல் நலிவுமே அவரின் அகால மரணித்திற்க்கு காரணமாக சொல்ல படுகிறது. அகால மரணம் என்பது மிக கொடுமையான ஒரு நிகழ்வு. அந்த கொடும் நிகழ்வுக்கு இத்தகைய பழக்க விளைவுகள் ஒரு வகையில் காரணம் என்னும் பொழுது இந்த கொடுமைக்கு அவரையே கூட ஒரு கர்த்தாவாக எண்ணத் தோன்றுகிறது. அவரின் 10 வயது மகன் கதறி அழும் காட்சியை பார்க்கும் பொழுது "No pleasure in life is worth, if you think it would even remotely be a cause for such a pain" என்று தான் எண்ணத் தோன்றியது.