Monday, April 7, 2008

Poem

எண்ணம் விளங்கா வடிவமாய், எனக்கே புரியா உருவமாய் திகழும் என் பாடல்
எங்கு போய்ச் சொல்ல...என் கவிதைகள் எனக்கே புரியவில்லை...
ஆணவம் இல்லை என் குரலில்..அழுகை தான் அதிகம்.
குழந்தையை பெற்றும் அடையாளம் காணாத தாய் போல நெஞ்சில் பரவும் சோகம்
இதை எண்ணி எழுதினேனா அதை நினைத்து விளக்கினேனா..
எதில் மயங்கி இதை படைத்தேன்..கனவில் எங்கே இதை விதைத்தேன்...எனப் புரியா கேள்விகள்
விடை அறியா கேள்விகள் ஏராளம்..
என் கேள்விக்கு விடை பலரிடம் இருக்கலாம்..ஆனால் என்னால் தான் கேட்டு கொள்ள முடியவில்லை..
எனக்கு உண்மைப்புரியலில் காதல் அதிகம்..தெரிந்து தெளிதலில் வேகம் அதிகம்

1 comment:

Sankar said...
This comment has been removed by the author.