This poem was written a couple of days after the beginning of attack on Afgahnisatan as retaliation to the Sept 11th attack--
ஒரு கன்னத்தில் அரைந்தால் மறுகன்னத்தையும் காட்டு என்று..
நாம் நம்பி மண்டி இடும் யேசு சொன்னது நமக்கு அல்ல நம் எதிரிக்காக..
நக்ஷத்திரங்களோடு போட்டி இடும் வெளிச்சத்துண்டங்களை
வானில் இருந்து பொழியும் வெடி குண்டு மழையை ரசிப்போம்
சீறிப்பாயும் போர் விமானங்கள்.. ஆஹா.. என்னவேகம்.. என்ன வேகம்..
அந்த ஏவுகனைகள் அது காலத்தின் ஆச்சரியம்
எல்லாம் இரவு நேரத்தில் நடப்பத்தால் பார்க்க ரொம்ப உற்சாகமாக இருக்கும்.
நம் வீட்டு குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டி உணவு ஊட்டலாம்
நடந்த கோரத்ிறிறிக்கு சரியான பதிலடி என்று பெருமைப்படலாம்.
என்ன..
கீழே சில பச்சிளம் குழந்தைகள் மடிந்து போகும்..
பல யுவதிகள் காதலர்களையும்
ஒரு தேசம் கனவுகளையும் இழக்கும்
பின் வரும் தலைமுறைகள் பிளுடோனியக்கதிரை சுவாசித்து..
விநோத வலிகள் கொள்ளும்..
சூரியனையும் நீரையும் உணவாக மாற்றிதரும் பரிணம்மிப்பின்
ஆச்சரியமான தாவரங்கள் .. அங்கே உயிர் துளிர்க்க அஞ்சும்..
இதுவரை அவன் சொன்னதை நம்பாத சிலரையும் நம்ப வைக்கும்..
அதனாலென்ன..
நமக்கு தேவை வான வேடிக்கைகள்..
விண்ணில் மிதக்கும் செயற்கைக்கொள்கள் விளம்பரங்களோடு சேர்த்து..
வேடிக்கையை நம் வீட்டு படுக்கை அறையில்
துப்பும் வேட்கையோடு காத்திருக்கின்றன..
உன் ஒரு கன்னத்தில் மறு கன்னத்தையும் காட்டு
என்று நாம் நம்பி மண்தியிடும் யேசு சொன்னது நமக்கல்ல
......நம் எதிரிக்காக
Tuesday, December 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment