Sunday, February 1, 2009

சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி

சர்க்கரை நோய், என்று சொல்லப்படும் Diabetes இன்று மனிதர்கள் எதிர் கொள்ளும் உடல் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று. அதிலும் India is Diabetes's world capital என்று சொல்லப்படுகின்ற அளவில் நம் நாட்டில் இந்த நோயின் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சர்க்கரை நோயை சமாளிப்பது எப்படி என்ற சிந்தனைக்கு பதில் கூறும் நோக்கத்தில் "சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி" என்ற தலைப்பில் Dr. Maruthupandian(எழுத்து வடிவம் அய். ஜெயச்சந்திரன்) எழுதிய(!) இந்த புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது(விலை ரூ. 80). இந்த புத்தகத்தை படித்த பின்பு இந்த புத்தகம் தொடர்பாக எனக்கு தோன்றிய எண்ணங்களையும் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ள எண்ணும் ஒரு முயற்ச்சியே இந்த பதிவு ஆகும்.



முந்தைய paraவில் "எழுதிய" என்று ஆச்சரிய குறியிட்டதன் காரணம் என்னவென்றால், எனக்கு இந்த எழுத்து வடிவம் என்ற சொல்லின் அர்த்தம் சரியாக புரியாததே ஆகும். இந்த புத்தகத்திலும் அதன் விளக்கம் எதையும் நான் பார்க்க முடியவில்லை. என்னுடைய understanding என்னவென்றால் there is an abundant wealth of technical(includes medical)/field specific knowledge that needs to be translated(I dont just mean the language here) and be made accesible to a larger population and are these "எழுத்து வடிவம்" some sort of facilitators for such an exercise. In the sense these are set of people, who try to digest the technical details involved through dialogue with the field experts and translate the information into a written/literary form. இந்த புத்தகத்தில் கூறப்படும் "எழுத்து வடிவம்" இந்த வகையை சார்ந்த்தா?, தெரியவில்லை.

முதலில் இந்த புத்தகத்தின் மையக்கருத்தாக Dr. Maruthupandiyan சொல்லும் விஷயம் என்னவென்று பார்போம். இந்த சர்க்கரை நோயானது Chronic Illness வகையை சார்ந்தது, அவை Acute Illness வகையை போல தோன்றிய உடன் கிடு கிடுவென வளர்ந்து உடலுக்கு தீங்கு விளைவிக்காமல், நம் உடலிலேயே நீண்ட காலம் உரைந்து பல வித நோய்களுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்க கூடிய ஒரு நோய். ஆனால் பெரும்பாலனோருக்கு நினைத்தால், உரிய வாழ்வியில் மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டால் இந்த நோய் வராமல் தடுக்கவும், அப்படியே வந்து விட்டாலும் அதன் தாக்கத்தை வெகுவாக குறைக்கவும் சாத்தியம் உள்ள ஒரு நோயாகும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதற்க்கு இந்த நோய் பற்றிய முழுமையான அறிவும், விழிப்புணர்வும், கட்டுக்குள் வைக்க தேவையான தகவல்களும் அறிந்து வைத்தலும் உதவும் என்ற நம்பிக்கையும், அந்த நம்பிக்கையை செயலாக்கும் நோக்கத்தில் உருவானது தான் இந்த புத்தகம் என்றும் சொல்கிறார்.

சர்க்கரை நோய் பற்றிய ஒரு எளிய அறிமுகத்துடன் தொடங்கி, அது யார் யாருக்கு வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம் என்று விளக்கி, அந்த நோயின் தன்மை, மற்றும் பல வகைகளை என்ன என்று எடுத்து கூறி, நோய் தோன்றலின் அறிகுறிகள் எவை என்றும், அந்த அறிகுறிகளை தொடர்ந்து அதை உறுதி படுத்தி கொள்ள தேவையான பரிசோதனைகள் என்ன என்ன என்று விளக்குகிறது புத்தகத்தின் முதல் பகுதி. இதன் இரண்டாம் பகுதியில் இந்த நோயின் பொதுவான பாதிப்புகள், மற்றும் இந்த நோயினால் ஏற்படக்கூடிய நீண்ட நாள்பட்ட பாதிப்புகள் ஒவ்வொன்றையும் எடுத்து கொண்டு விரிவாக விளக்க படுகிறது. இந்த நோய் பராமரிப்பு பட்ற்றியும், மேற் கொள்ள வேண்டிய உணவு முறை, உடற் பயிற்சிகள் பற்றியும் விளக்க படுகிறது. இதனை தொடர்ந்து சில நோயாளிகளின் கேள்விகலுக்கு டாக்டரின் பதில்களும் இந்த பகுதியில் இடம் பெருகின்றது. அதன் பின் பிற்சேர்க்கையாக சில உபயோகமான(உணவு அட்டவணை, பரிசோதனை முறைகள் ஆகியவை) தகவல்கள் வழங்க பட்டுள்ளன.

முதலில் இந்த புத்தகம் ஒரு டாக்டராலேயே எழுதப்பட்டிருபது இந்த புத்தகத்தில் உள்ள தகவல்களுக்கும் கருத்துக்களுகும் ஒரு நல்ல நம்பகத்தன்மையை ஏற்படுதுகின்றது. நோய் பற்றிய அறிமுக பகுதிகளும்(குறிப்பாக கனணையம் செயல்பாடு குறித்த முதல் பகுதி விளக்கங்கள்), ஒரு மேம்போக்கான விளக்கமாக இல்லாமல், முழுமையான நோய் குறித்த அறிதலை ஏற்படுத்த வழி வகுக்கும் வகையில் அமைந்து உள்ளது இந்த புத்தகதின் சிறப்பு. அதே நேரத்தில் புத்தகத்தின் பல இடங்களில், குறிப்பாக நாள்பட்ட விளைவுகளை ஒவ்வொன்றாக எடுத்து விளக்கும் பகுதிகளில், டாக்டர் தன் நோயாளிகளின் நடந்த உண்மை சம்பவங்கள், special situations ஆகியவற்றை பகிர்ந்து கொண்டிருந்தால் இன்னும் பயனுள்ளதாக அமைந்து இருக்கும். இந்த குறை ஒரளுவுக்கு கேள்வி பதில் பகுதியில் நிறைவடைகிறது.

Diabetes வராமல் தடுத்து கொள்ளவும், வந்த பின் காத்து கொள்ளவும் ஒரு பன்முக அணுகுமுறை தெவை படுகிறது. அவைகளில் உணவு முறை, உடற் பயிற்சி இரண்டும் முக்கியமான முகங்கள். இந்த உணவு முறைகள் என்பது ஒரு region specific item. அதனால் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை நம் உணவு முறைகளுக்கு apply செய்து பார்ப்பது அவசியமாகிறது. For example Glycemic Index of the food is considered an important aspect in deciding on the food habits of the diabetic. This glycemic index is typically associated to a specific food product(Rice has a specific GI, whilst Wheat, Pulses has a different GI). Unlike, most of the western diet, Indian food grains or pulses(Protein intensive) are not eaten in isolation. Even our Idli or Dosas are a combination of Rice and Pulses, unlike the western staple diets like wheat potatoes, hence interpertation of diet based on GI is a little tricky in our context). இந்த மாதிரி இந்த நோய் அணுகுமுறைகளுக்கு ஒரு வித region/context specific approach பற்றி கூற பல விஷயங்கள் உள்ளன. இவை இந்த புத்தகத்தில் address செய்ய பட்டிருபதாக நான் உணரவில்லை. அதே போல இந்த உணவு முறை பகுதிகளை ஒரு dietician contributory articleஆக எழுதி இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த கருத்து உடற் பயிற்சி குறித்த பகுதிக்கும் பொருந்தும்.

புத்தகத்தில் முக்கியமாக நாள்பட்ட விளைவுகள் குறித்து விளக்கும் இடங்களில், மேலும் சில விளக்க படங்கள் கொடுதிருந்தால் உபயோகமாக இருக்கும். அதே போல பிற்ச்சேர்க்கை பகுதிகளை கூடுதல் பக்கங்களாக சேர்க்காமல், diet, Calorie charts ஆகியவற்றை சமையல் அறையில் ஒட்டி கொள்ள கூடிய அட்டவணை வடிவில்(ஒரு உதாரணதிர்க்கு) சேர்த்தால் பயணுள்ளதக இருக்கும். அதே மாதிரி handling low sugar emergencies பற்றிய குறிப்புகளை ஒரு கையடக்க புத்தக இணைப்பாக வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

To summarize, inspite of the fact that I believe that there are things whih ould have been dealt differently, this book does provide a very comprehensive knowldege on issues related to diabetes and as to how to deal with it as an illness.

1 comment:

Anonymous said...

Buy this Book Online @ MyAngadi.com

http://www.myangadi.com/sarkkarai-noi-samaalippathu-eppadi-nalam-publications