Sunday, March 9, 2008

சுஜாதா

"எவ்வளவு படிச்சிருகோம். எவ்வளவு பேசியிருக்கோம். தலைவரு போயிட்டாரு இல்லையா"

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தனக்கும் தன் நீண்ட கால நண்பனுக்கும் சுஜாதாவின் மறைவு செய்தி கேள்விப்பட்டவுடன் நடந்த உரையாடலாக தனது அஞ்சலி கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதுவே 1980..90களில் தனது இளம் பிராயத்தை செலவிட்ட பல இரு நண்பர்களிடையே அன்று இரவு நடந்த உரையாடலாக இருந்திருக்கும்.


எனக்கு தெரிந்தவரை இந்த அளவுக்கு ஒரு cult following..superstar status popularity உள்ள தமிழ் எழுத்தாளர் வேறு யாரும் இல்லை(ஒரளவுக்கு பாலகுமாரன் இந்த categorieல் உள்ளார் என்றாலும்... சுஜாதாவுக்கு தனி இடம்).

எங்களை போன்று சிற்றூர்களிலும் கிராமங்களிலும் internet, satellite television இல்லாத காலத்தில் தமிழ்நாட்டில் வளர்ந்த பல இளைஞர்கள் வாழ்கையில் சுஜாதாவின் கதைகளுக்கும், கட்டுரைகளுக்கும் பெரும் பங்குண்டு. பின்னாளில் வேறு பல எழுத்துகளுக்கும் சிந்தனைகளுக்கும் அறிமுகம் ஆன பின்பு சுஜாதா எழுத்துகள் மீது மாற்று, எதிர் கருத்துக்கள் இருந்தது என்ற போதிலும் வாசிப்பின் இன்பத்தை எனக்கு வழங்கியவர்களில் R. K. Narayanக்கும் சுஜாதாவுக்கும் தான் முதலிடம்.

எனக்கு மிகவும் பிடித்த அவரது எழுத்துக்கள்.

---மஹாபலி --இது ஒரு சிறுகதை. இந்த கதையின் நாயகன் ஒரு தீவிரவாதி. Fountain Head கதை நாயகன் Howard Roark போல, it is a character lot of young people would like to identify with.

--அம்மாஞ்சு என்கின்ற ஒரு பாத்திரத்தை முன்னிறுத்தி எழுதப்பட்ட ஒரு ஸ்ரீரங்கத்து கதை. இதுவும் ஒரு சிறுகதை.

--கற்றதும் பெற்றதும் ---- பல வாரங்கள்.

--1993ல் சுஜாதா retire ஆனவுடன் கல்கியில் எழுதிய ஒரு கதை. தொலைந்த தன் மகனை தேடி ஒரு தம்பதி காஞ்சி பெரியவாளை சந்திக்க செல்வது குறித்த ஒரு கதை. அப்பொழுது நாங்கள் காஞ்சிபுரத்தில் வசித்து வந்தோம். Chennai-Kanchipuram route பற்றி அவர் செய்திருந்த சில observations பிரமிக்க வைத்தது.

--ஸ்ரீரங்கத்து தேவதைகள்

--பிரிவோம் சந்திப்போம்

--பார்வை -- இதுவும் ஒரு சிறுகதை. ஒரு குருடன் தன் பார்வை பற்றி விளக்கும் கதை.

--தன் தந்தையின் மரணம் பற்றி எழுதியிருந்த ஒரு சிறு கட்டுரை.

தனது 70வது வயதில் கற்றதும் பெற்றதும் தொடரில் வயோதிகம் பற்றி, வாழ்கையில் pilot ஆக வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற கனவெல்லாம் மாறி காலை எழுந்தவுடன் ஒழுங்காக பாத்ரூம் போனாலே நிம்மதி என்ற நிலை..என்று பொருள்பட கூறி..வாழ்கையே ஒரு வித progressive compromises than என்று சொல்லி இருப்பார். இந்த மாதிரி அவர் எழுத்தில் பசுமையாய் நினைவில் பதிந்த விஷயங்கள் பல பல..

சுஜாதாவை இரு முறை நேரில் பார்த்திருகிறேன். அலைபாயுதே படத்தின் preview காட்சி பார்த்து விட்டு வெளியே வந்த அவரிடம் எங்களை(நானும் என் அண்ணனும்) அறிமுகப்படுத்திகொண்டு தங்களின் தீவிர ரசிகர்கள் என்றும், தங்களை எப்போதாவது ஒரு முறை சந்தித்து தங்கள் எழுத்துக்களால் எங்களின் மீது நீங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொன்னோம். வீட்டுக்கு phone செய்து விட்டு வாருங்கள் என்று சொல்லி விட்டு கிளம்பி சென்றார். அவர் நமக்கு வழங்கிய இன்பமான தருணங்களுக்கும் கற்ற விஷயங்களுக்கும் தனியே சந்தித்து நன்றி சொல்லி விட வேண்டும் என்று கூறி கொண்டோம்.

அசோகமித்திரன் அவர்களின் பவள விழா நிகழ்ச்சியில் கிழக்கு பதிப்பகம் Director Sathya Narayananனுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அவர் அசோகமித்திரன் ஒரு one of the earliest bloggers என்று அவர் எழுத்தை பற்றி குறிப்பிட்டார். அப்பொழுது அதன் அர்த்தம் சரியாக விளங்கவில்லை. பத்ரி அவர்கள் சுஜாதா அஞ்சலி பதிப்பில் அசோகமித்திரனும், சுஜாதாவும் அவர்கள் கண்டது, கேட்டது, தங்களை பாதித்த விஷயங்கள் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் Bloggers என்று குறிப்பிட்டு எழுதிய பொழுது அர்த்தம் விளங்கியது. சுஜாதாவை பற்றிய இந்த observation ரொம்பவும் முக்கியமான ஒன்றாக நினைக்கிறேன். இதுவே அவர் வாசகர்களிடம் அவருக்கு ஒரு அன்னியோன்யத்தை ஏற்படுத்தியது என்று நினைகிறேன்.

மரணம், அந்த பிரிவின் தாக்கம் என்கின்ற உணர்வுகளை பல பரிமாணங்களில் கடந்த 5 வருடங்களாக அனுபவித்து வரும் எனக்கு, சுஜாதாவின் மரணம், அதன் தாக்கத்தின் எனக்கு உள்ள தொடர்பு பற்றி குறிப்பாக சொல்ல ஒன்றும் இல்லை. சமீபத்தில் அவர் வாயாலேயே அதை பற்றி சொன்ன ஒரு குறிப்பு தான் நினைவுக்கு வருகிறது.

"மனித வாழ்வின் மிக சுவாரசியமான விஷயங்களில் ஒன்று திடீரென காணாமல் போய் விடுவது.."

No comments: