மழை
வெண்ணிற மேகத்துக்கு நிற மமதை
கருமை மேகத்தை கேலி செய்ய
கரு நிற மேகம் சோகம் கொண்டு
பூமித்தாயிடம் ஓ..வென்று அழுதது
இரவு
நிலா ஒன்று தனியாய் நின்றது
சூரியன் விட்டு சென்றதென்று புலம்பி அழுதது
அன்னை வானம் பொருக்கவில்லை
நட்சத்திரக் குவியல் தந்து காவல் செய்தது
நிலவும் சிரித்தது
இரவும் இனித்தது
தமிழ் ஈழம்
நாம் இங்கே போரைக் கண்டதில்லை
துரத்தே வெடிக்கும் துப்பாக்கி சத்தத்தில் கண்ணெதிரே அழும் குழந்தையை ரசித்ததில்லை
வீட்டு முற்றத்தில் இரத்தக் கறையுடன் துணிகளை உலர்த்தியதில்லை
நாம் இங்கே கண்டதெல்லாம்
கோவில் வாசலில் இரு கால்களையும் இழந்த பிச்சைக்காரனும்
தனக்குள்ளேயே புலம்பும் Schizopherniacயும்
காதில் hearing aidம், கண்ணில் தடித்த கண்ணாடிகளும் கொண்ட சிகப்பான சிறு பெண்ணும்
அலை சத்தத்தில் குண்டாண அரசியல்வாதியின் பேச்சும் தான்
Mount Road Church Park வாசலில் ஒரு இலங்கை தமிழருடன் பேசிய பின் எழுதியது
Friday, February 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment