இந்த புத்தகத்தின் விமர்சனம் எழுதும் எண்ணத்தில் தான் இந்த பதிவை எழுத ஆரம்பித்தேன். ஆனால் இந்த புத்தகத்தை பற்றிய நான் பகிர்ந்து கொள்ள விரும்பிய விஷயங்கள் at a more generic level புற்று நோய் தொடர்பான மாற்று சிகிச்சை முறைகள் பற்றிய கருத்துகலொடு ஒத்து போவதால் நான் இந்த பதிவை just அந்த புத்தகத்தை ஒற்றியதாக குறிக்கி கொள்ளவில்லை.
Cancer என்பது ஒருமுக நோய் அல்ல. அது பன்முக, பலவேறு பரிமாணங்கள் கொண்ட ஒரு நோய். உதாரணத்திற்கு ஒருவருக்கு ரத்த புற்று நோய் உள்ளது என்று மட்டும் சொல்வது, அந்த நோயின் தாக்கத்தை பற்றியோ, அது எந்த அளவிற்கு அவரின் உயிருக்கு அபாயகரமானது என்றோ அறிந்து கொள்ள உதவாது. ரத்த புற்று நோயில் எந்த வகையை சார்ந்தது, அதன் தாக்கம் அல்லது வளர்ச்சி எவ்வளவு வேகமானதாக இருக்கும் (Acute or Chronic), மேலும் எந்த வகை cell தொடர்பு கொண்டது என்று பல தொடர் விவரங்கள் எல்லாம் சேர்த்து மட்டுமே ஓரளவிற்கு அதன் அபாயம் பற்றி ஒரு அபிப்பிராயம் ஏற்படுத்தி கொள்ள முடியும். உண்மை இப்படி இருக்கும் பொழுது பொது வழக்கில் Cancer என்ற வார்த்தை பொத்தாம் பொதுவாக உடலின் எந்த உறுப்பு சம்பந்த பட்டதாக இருந்தாலும் அதன் அர்த்த தாக்கம் ஒன்றாகவே இருக்கும் நிலையில் தான் உள்ளது.
Cancer என்பது பொதுவாக ஒரு life threatening illness என்றும், புற்று நோய்க்கு உண்டான பல சிகிச்சை முறைகள் உடலுக்கு மிகுந்த வலி ஏற்படுத்த கூடியதாகவும், serious long term பக்க விளைவுகள் ஏற்படுத்துவதாகவும் உள்ளது என்பதும் பொதுவாக நம்பப்படும் கருத்துகலாக உள்ளன. நோயின் தாக்கம் உயிரையே அழிக்கும், அதற்கு நிச்சய நிரந்தர தீர்வு என்பது இல்லை, நோய்க்கு உண்டான சிகிச்சையே நோயை விட உயிருக்கு அபாயம் விளைவிக்க கூடியதாக இருக்கும் நிலையில், இந்த நோயை அணுகும் முறை, நோய் பற்றிய கருத்துகள் ஒன்றுக்கும் மேற்பட்டதாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. Mainstream treatment approach என்பது allopathy (Chemo, Radiation-theraphy, Surgery) என்கின்ற முறைகளாகவே இருக்கின்றது.
Alternative Medcine என்பது பலவகை பலதரப்பட்ட சிகிச்சை முறைகளையும் குறிக்கும் ஒரு சொல். இது Conventional என்று நம்பப்ப்டும் சிகிச்சை முறைகள் அல்லாதவைகளை குறிக்கும் ஒரு பொது சொல். ஆயுர்வேதம், உந்நாநி போன்ற பல சிகிச்சை முறைகளும் இதில் உள் அடங்கியாவை. பொதுவாக conventional முறைகளால் கை விடப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு புகலிடமாக இவை உள்ளன. மேலும் சில சந்தர்ப்பங்களில் conventional சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில் இத்தகய alternative முறைகளை நாடி செல்கின்றனர்.
Conventional treatment approaches மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானவைகளாக இருக்கிறது. Pharma giants, public health costs, insurance firms என்று பல stakeholders, driven by profit motives என்கின்ற பல குறுகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு உள்ளது என்பது ஏற்று கொள்ள பாட வேண்டிய ஒரு உண்மை. அதே நேரத்தில் புற்று நோய் ஆராய்ச்சியில் முன்னேற்றம் ஏற்படுவதும், புற்று நோய் குணமாவதுமே அவர்கள் வியாபாரததிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் அத்தகய ஒரு விஷயத்தை விரும்பாத வில்லன் என்கின்ற kind of portrayal is to me kind of taking it to the extreme..
Cancerrealism என்னும் தத்துவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இந்த நூலின் ஆங்கில மூலம் "The other face of Cancer" என்னும் புத்தகம் அதற்கு முன்பு 1973ல் "The nature of cancer" புத்தகமும் அதன் தொடர்ச்சியில் நடந்த ஆராய்ச்சி கட்டுரைகளின் தொகுப்பு என்றும் குறிப்பிடுகின்றனர் . இந்த தத்துவம் ஒரு மாற்று முறையாக மட்டும் இன்றி ஒரு radically different கண்ணோட்டம் ஆக இருக்கிறது. அது புற்று நோய் என்பது அறிதல் புரிதல் எல்லாவற்றிற்கும் அப்பாற்பதத்(ஏதோ பரம்பொருள் போல!!). அதை அதனுடைய போக்கிலேயே விட்டு விடுதல் உத்தமம் என்று சொல்கிறது.
நான் தேடி கண்டுபிடித்தது ஆங்கில மூலம் 1994ல் வெளியாகியுள்ளது. Oncology and field of cancer research has had some dramatic developements in the last years. அதனால் இந்த மாதிரியான ஒரு மருத்துவ புத்தகத்திற்கு எந்த காலகட்டத்தை குறிக்கிறது என்று தெரிவிப்பது மிக அவசியம். இந்த புத்தகத்தில் அதை ஒரு பொருட்டாக கூட எடுத்துக்கொண்டிருப்பதாக தெரியவில்லை. ஏதோ பேருக்கு கடைசி chapter 2000-2006 ஒரு கண்ணோட்டம் என்று உள்ளது.
Anyway even in the other chapters அவர்கள் நம்பும் இந்த கொள்கைக்கு நம்மை convince செய்வதற்கு உபயோகிக்கும் ஒரே யுததி.."Negative Criticism of the alternative mainstream treatement approaches". While i do not have any major issues with that attitude of theirs that does not really address the biggest challenge people face when they have to make a choice on any of the alternative ways to deal with their illness.
Cancer patientஓ அவர்களின் குடும்பத்தினரோ mainstream சிகிச்சை முறை வேண்டாம். ஏனெனில் அதில் பல அபாயங்களும் சிக்கல்களும் உள்ளன ஏதாவது ஒரு மாற்று சிகிச்சை முறைகளை முயற்சி செய்து பார்ப்போம் என்று என்னும் பொழுது அவர்களுக்கு பெரும் தடையாக இருப்பவை
1. Lack of credible alternatives. I mean existence of an alternative which presents itself as a proper system. Most of the alternate approaches are extremely ad-hoc.
உதாரணத்திற்கு ஒரு நோயாளி ஒரு மாற்று சிகிச்சை முயற்சி செய்து பார்த்து விட்டு அதன் மீது திருப்தி இல்லை, அது கூட வேண்டாம் அந்த particular treatment center adminsitering such an approach மீது நம்பிக்கை இல்லை அதனால் வேறு ஒரு இடத்தில் அல்லது mainstream முறைக்கே திரும்ப வேண்டும் என்றால், currently the process is very cumbersome.
மேலும் மாற்று சிகிச்சை முறைகளோ அதை தேர்ந்தெடுததவர்கள் the process they had been through in convincing themselves to choose this approach, அதை பற்றிய சிந்தனைகள் பகிர்ந்து கொண்டால் மிக உபயோகமாக இருக்கும்.
Infact அந்த மாதிரி மாற்று முறைகள் முயற்சி செய்து அது பயனில்லை என்று உணர்ந்து அப்பொழுது அந்த guilt தவறு செய்து விட்டோமோ என்ற உணர்வை எப்படி ஆட்கொண்டார்கள் ஆகிய தகவல்களே மிக பயனுள்ளதாக இருக்கும்
Tuesday, January 22, 2008
Subscribe to:
Posts (Atom)